எஹலியகொடையி்ல் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

எஹலியகொடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிதாக 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 336 ஆக அதிகரித்துள்ளது.

புதிய தொற்றாளர்களுக்கு இடையில் எஹலியகொடை திவுரும்பிடிய ஆடை உற்பத்தி நிலையத்தின் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களும், எஹலியகொடை நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் ஊழியரும் மற்றும் எஹலியகொடை பதுவத்த பிரதேசத்தில் அதிர்ஷ்ட சீட்டு விற்பனை செய்யும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர வைத்திய பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் இன்று 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

x