நாட்டில் மேலும் 265 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
சிறைச்சாலை கொத்தணியில் 35 பேருக்கும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 225 பேருக்கும் இன்று தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 37,891 ஆக அதிகரித்துள்ளது.
8 ஆயிரத்து 410 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29000 ஐ கடந்துள்ளது.
இன்று மேலும் 618 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,300 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 42 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.