2125 கிலோ கிராம் மஞ்சள் தொகை பறிமுதல்

நுரைச்சோலை – மாம்புரி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2125 கிலோ கிராம் மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடற்றொழில் படகு ஒன்றின் ஊடாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மஞ்சள் தொகையின் பெறுமதி 160 லட்சத்திற்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஞசள் தொகை கைப்பற்றப்பட்ட வீட்டில் இருந்த இரண்டு பேர் காவல்துறையால் பொறுப்பேறக்கப்பட்டுள்ளனர்.