Traffic Bot

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நீடிப்பு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

எனினும் தொடர்ந்தும் சாட்சிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதன் காரணமாக இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடதக்கது.

x