விசேட சோதனை நடவடிக்கையிள் 249 பேர் கைது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, நாடு பூராகவும் நேற்றிரவு 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வேறு குற்றங்கள் தொடர்பில் 3016 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.