வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஊக்குவிப்பு

கொவிட் 19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் 2021 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு வெளிநாட்டில் தொழில் புரிபவர் உழைக்கும் வெளிநாட்டு செலாவணியை; அவர் அல்லது அவர்களது பயனாளிகளினால் இலங்கை ரூபாய்க்கு மாற்றீடு செய்யப்படும் ஒவ்வொரு ஐக்கிய அமெரிக்க டொலருக்கும் இரண்டு ரூபாய் (ரூபா 2.00) ஊக்குவிப்பு வழங்கப்படும்.

இந்த ஊக்குவிப்பு திட்டமானது உள்ளுர் வணிக வங்கிகளினால் அமுல்படுத்தப்படுவதோடு ஊக்குவிப்புக்கான கிரயமானது அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும். இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்குரிய வழிகாட்டல்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும்.

தம்மிடமுள்ள அந்நிய செலாவணியை பாதுகாப்பான மூலங்களினூடாக அனுப்புவதற்கும் ( மாற்றல் செய்வதற்கும்) அதனை இலங்கை ரூபாய்க்கு மாற்றீடு செய்யும்போது கூடிய உழைத்துக்கொள்ளக்கூடிய இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாரு நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளிசாட்டில் தொழில்புரிவோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.