பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் 130 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் 130 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அந்த பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, எஹலியகொடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிதாக 11 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதற்கு அமைய அந்த பகுதியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 311 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பாதுக்கை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 9 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன் கொவிட் 19 நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

x