சார்ஜென்ட் சிறைச்சாலை அத்தியட்சகரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் தம்மிக்க தசநாயக்கவை வேறொரு சிறைச்சாலையொன்றின் கைதி ஒருவர் மூலமாக கொலை செய்ய அதன் சார்ஜென்ட் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக குருவிட்ட பொலிஸார் இரத்தினபுரி பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகரை கொலை செய்வதற்கு வேறொரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய கைதியொருவரின் ஊடாக குறித்த சிறைச்சாலை சார்ஜென்ட் திட்டமிட்டுள்ளார்.

ஹெரோயின் கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சார்ஜென்ட் குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து பல்லேகெலே சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சார்ஜென்ட் குருவிட்ட சிறைச்சாலையில் சேவையில் இருந்த போது வௌிப்புற சேவைகளுக்காக அவரை அனுப்புதல் மற்றும் அவரால் சிறைச்சாலையினுள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடி செயல்களை தடுத்த காரணத்தால் சிறைச்சாலை அத்தியட்சகர் மீது கோபமுற்று இந்த கொலை சூழ்ச்சியை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்