அங்கொடா லொக்கா மரணம்: இலங்கையிடம் உதவி கோருகிறது இந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு

தமிழகத்தில் அண்மையில் மரணித்த இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் அங்கொடா லொக்காவின் மரணம் குறித்த விசாரணைக்காக, இந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இலங்கையிடம் உதவி கோரியுள்ளனர்.

த டைம்ஸ் ஒஃப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசிடம் தடயவியல் சான்றுகள் பெற உதவி கோரி இந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடாக இலங்கைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அங்கொட லொக்காவின் பெற்றோரின் இரத்த மாதிரிகளை வழங்குமாறு அதில் கோரப்பட்டிருப்பதாகவும் சிபி-சிஐடி என்ற இந்திய மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.