கொழும்பு மாவட்டத்தில் 9 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கசவம் அணியாமை ஆகிய காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்படடுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,611 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 9 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.