மலையகத்திற்குள் நுழையும் ஐந்து இடங்களில் கொரோனா பரிசோதனை

MCC ஒப்பந்தம் எந்த வடிவில் கொண்டு வரப்பட்டலும் அதில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை பகுதியில் இன்று19 ஆம் திகதி இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை முறையை ஒழிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

´5 வருடங்களில் அபிவிருத்தியின் பலன்களை அனுபவிக்க முடியும். ஒப்பந்தம் எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும் அதில் அரசாங்கம் கைச்சாத்திடாது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் நாட்டுக்கு தீங்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட நாம் தயார் இல்லை. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியது. அதாவது தேசிய பொருளாதார ஊக்குவிப்பை பிரதானமாக கொண்ட வரவு செலவுத் திட்டத்தையே நாம் முன்வைத்துள்ளோம். தற்போது கொரோனாவுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுகக்ப்பட்டுள்ளன. கேகாலை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பாணியையும் கொரோனா ஒழிப்புக்ககவே பயன்படுத்தவுள்ளோம். மலையகத்திற்குள் நுழையும் ஐந்து இடங்களில் கொரோனா பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. அதில் எவருக்கேனும் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.´ என்றார்.

x