மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 495 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 36 ஆயிரத்து 544 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 827 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 74 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்றுறுதியான அனைத்து கைதிகளும் ஆண்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 372 பேருக்கு இதுவரையில் தொற்றுறுதியாகியுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் 114 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

அத்துடன் சிறைச்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் ஆயிரத்து 172 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

x