தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று அதன் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பிற்கான பரிந்துரைகளை முன்வைத்தல், கொரோனால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அதனை தலைவர் இரா.சம்பந்தனுடன் இணைந்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்திருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்றையதினம் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.