எம்.சீ.சீ.ஒப்பந்தம் வேறு எந்தப் பெயரில் வந்தாலும் அரசாங்கம் அதில் கைச்சாத்திட மாட்டாது

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்த வேளையில் தேசியத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உலக உணவு நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்காக நீண்ட கால மற்றும் இடைக்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டிற்கு பாதகமான எந்தவொரு ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாத்திட மாட்டாது என அவர் வலியுறுத்தினார்.

எம்.சீ.சீ.ஒப்பந்தம் வேறு எந்தப் பெயரில் வந்தாலும் அரசாங்கம் அதில் கைச்சாத்திட மாட்டாது. நாட்டின் தற்போதைய நிலைக்கு அமைய ஊடகங்களுக்கான சுய ஒழுங்குறுத்தல் அவசியமாகும்.

திங்கட்கிழமை இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களைப் பதிவு செய்யும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.