காவல்துறை உத்தியோகத்தாின் துப்பாக்கி இயங்கியதால் கைதியொருவர் காயம்

கந்தர காவல் நிலையத்தில் காவல் துறை உத்தியோகத்தர் ஒருவாின் துப்பாக்கி இயங்கியதால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று 18 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த உத்தியோகத்தாின் வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டதோடு மாத்தறை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.