மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் திங்கட் கிழமை!

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று  18ஆம் திகதி இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

´ நேற்று  சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறை நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அனைத்தும் விடயங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளோம். என்ன செய்வது என்று. என அமைச்சர் தெரிவித்தார்.