ஒன்லைன் முறைமைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் சாத்தியம்

கொரோனா அச்சம் காரணமாக ஒன்லைன் முறைமைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொது மருத்துவமனையின் கண் மருத்துவர் பிரியங்க இந்தவெல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பார்வைக்குறைபாடு காரணமாக தினமும் 20 முதல் 30 வரையான பாடசாலை மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் முறைமையில் நடாத்துவதற்கு ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படியே ஒன்லைன் முறைமையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.