பதுளை அனர்த்த வலயப்பிரதேசத்தில் 3608 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் மூவாயிரத்து அறுநூற்று எட்டு 3608 குடும்பத்தினர் இயற்கை அனர்த்தம் உள்ளாகக் கூடிய அபாய வலயப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்புடன் நாம் இருந்து வருகின்றோம் என தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா குறிப்பிட்டார்.

பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 339 குடும்பங்களுக்கு காணி உறுதிகளும், வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் இன்று 18ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, டிலான் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தொடர்ந்து பேசுகையில்