இந்தநிலையில் இன்று கொழும்பு துறைமுகத்தின் மூன்றாம் நுழைவாயில் முன்னால் குறித்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மௌனப்போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
இதேவேளை, எஹெலியகொட – தலாவிட்டிய – வலவ்வத்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்விநியோகத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நீர்விநியோகத்திட்டத்தின் மூலம் தங்களுக்கு அன்றி நகர்பகுதிக்கு மட்டுமே நீர்விநியோகிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும் இந்த நீர்விநியோகத்திட்டத்தின் மூலம் வலவ்வத்தைக்கும் நீரை விநியோகிக்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து, மக்கள் அமைதியடைந்தனர்.