திகநாதென்ன பகுதியில் தீப்பரவல் படையினரால் அணைப்பு.

கல்கந்த பிரதேசத்தின் தியதலாவ மற்றும் பண்டாரவலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட திகநாதென்ன பகுதிகளில் திடீரென ஏற்பட்ட தீயானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் உதவியுடன் அணைக்கப்பட்டது.

இந்த திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தாவின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.