சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை லிடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்சி நிர்வகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அந்தந்த மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவானதால் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.