தப்பியோடிய கொவிட் தொற்றாளரின் புகைப்படம் வௌியீடு!

வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொவிட் 19 தொற்றாளரின் புகைப்படமொன்று பொலிஸாரினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

நேற்று (16) பிற்பகல் குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மருதானை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் காசநோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த தினம் வெலிசர சுவாச நோய்க்கான வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.