மின்சார வேலியில் சிக்கியதில் நபர் ஒருவர் பலி

மொரவெவ – பன்குளம பிரதேசத்தில் வசிப்பிடங்களுக்குள் பிரவேசிக்கும் மிருகங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கியதில் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த நபர் மொரவெவ பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காகச் வயலுக்குச் சென்ற வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தொிவித்துள்ளது.

உயிாிழந்த நபர் 25 வயதுடைய குருந்துவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.