பம்பலபிட்டி – யுனிட்டி ப்ளாசா மூடப்பட்டது

பம்பலபிட்டியில் உள்ள யுனிட்டி ப்ளாசா சிறப்பாங்காடி தற்காலிகமாக மூடுப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 4 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறப்பங்காடியின் 2வது மாடியில் உள்ள கணினி வர்த்தக நிலையம் ஒன்றின் பணியாளர் முதலில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மேலும் சிலருக்கும் தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள ஏனைய பணியாளர்களுக்கும் தற்போது பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.