விபத்துக்குள்ளான விமானப்படைக்குச் சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானம்

திருகோணமலை – சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் காணாமல் போய் இருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானம் கந்தளாய் – சூரியபுர – ஜனரஞ்சன வாவியில் விபத்துக்குள்ளானது.

குறித்த விமானம் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அதில் ஒருவர் மாத்திரமே இருந்துள்ளதாக விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.