விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானம்

திருகோணமலை – சீனக்குடாவில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போய் இருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானம், விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் – சூரியபுர – ஜனரஞ்சன வாவியில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபமானம் விபத்துக்கு உள்ளான போது விமானத்தில் ஒருவர் மாத்திரமே இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.