ஹேக்கித்தை பிரதேசத்தில் நாளை காலை முதல் 18 மணித்தியால நீர்வெட்டு

ஹேக்கித்தை பிரதேசத்தில் நீர் வழங்கும் குழாயின் சீர்திருத்தப் பணிகள் காரணமாக நாளை காலை 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரையான 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தொிவித்துள்ளது.

ஹேக்கித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலஹதுாவ, மருதானை வீதி, எலகந்தை மற்றும் எந்தளை போன்ற பிரதேசங்களிலேயே மேற்படி நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.