ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திக்க அவரது சட்டத்தரணிக்கு அனுமதி

அடிப்படைவாதத்துக்கு உதவியளித்ததாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தித்து, ஆலோசனைப் பெற்றுக் கொள்வதற்கு அவரது சட்டத்தரணிக்கு அனுமதி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட மனுமீதான விசாரணையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 2.30க்கு, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தமது சட்டத்தரணியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.