கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்

அரசாங்கம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில தெளிவுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன பதுளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.