லக்கலை பிரதேச பயிர்நிலத்திற்கு நீர் விநியோகம் தடை

லக்கலை – தலகொய் ஆர பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அரச காணிகளுக்கு  நீர் விநியோகமாகும் கால்வாய் அப்பிரதேச செயலாளரால் மூடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீர் விநியோகம் தடைப்பட்டதால் பயிர்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறெனினும் அரச காணிளை இப்பிரதேசவாசிகள் சட்ட விரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாகவும் , நெற் செய்கை என்ற போர்வையில் குறித்த காணிகளில் இரத்தினக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதாகவும் லக்கல பிரதேச செயலாளர் எஸ். விஜயகுமார் தொிவித்துள்ளார். இதனால் இக்கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் வரும் நாட்களில் குறித்த காணிகளை சட்டபூர்வமாக பிரதேச மக்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.