தம்புள்ளையில் வர்த்தகர்கள் நால்வருக்கு கொரோனா

தம்புள்ளை வர்த்தக மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளின்போது 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நால்வரும் தம்புள்ளை வர்த்தக மையத்தில் மூன்று வர்த்தக நிலையங்களில் தொழில் புாிவோர் என தம்புள்ளை நகர முதல்வர் ஜாலிய ஓம்பான தொிவித்தார்.

தம்புள்ளை வர்த்தக மையத்தில் இதுவரை மேற்கொண்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளில் 12 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.