உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு தற்காலிகமாக முடக்கம்

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த முடக்கத்தின் காரணமாக மக்கள் அச்சமடையாமல் தமது வீடுகளிலேயே இருக்குமாறு கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது பரவியிருக்கும் இந்த தொற்று மேலும் பரவாது இருப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.