வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பாரவூர்தி

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் டிப்பர் ரக வாகனத்தில் பயணித்த 02 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவில் இருந்து நோர்வுட் நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றனர்.