ஹட்டன் – கொழும்பு வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்றுடன் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி மற்றும் நாவலபிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று 18ம் திகதி மாலை 03.30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மரத்தினை அகற்ற பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கையின் மேற்கொண்டு வருதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் இதேவேலை பெயதுவரும் கடும் மலையின் காரனமாக கெனியன் மற்றும் லக்ஸபான ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.