பொடி லெசியிடம் 6 மணி நேர விசாரணை.

பூஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதிக்கு, பாதுகாப்பு செயலாளருக்கு மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையினுள் வைத்து குறித்த நபரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 6 மணி நேர வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.