காலியில் 07 கிராம சேவகர் பிாிவுகளுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு

காலி மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 07 கிராம சேவகர் பிாிவுகளுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 1768 பி.சீ.ஆர். பாிசோதனைகளில் நேற்று (11) கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அலுவலர் சங்கம் தொிவித்துள்ளது.

இதனடிப்படையில் காலி – மிலித்துவ, கோங்கஹ, தெத்துகொட-வடக்கு, தெத்துகொட-தெற்கு, தலாப்பிட்டிய, தங்கெதர-மேற்கு மற்றும் மக்குலுவ போன்ற கிராம சேவகர் பிாிவுகளுக்கே இவ்வாறு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.