கரவெட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்க வேலாயுதம் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, நேற்று (17) மாலை இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.