பிரதான சந்தேகநபர் மொஹமட் சரீப் ரிபாய் கைது

பண்டாரகம, அட்டுளுகமவில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான கொடுகொல ரிபாய் என்று அழைக்கப்படும் மொஹமட் சரீப் ரிபாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் நேற்றைய தினம் (16) கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் பலாங்கொடை, கல்தொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 09 ஆம் திகதி சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக அட்டுளுகம, மராவ பிரதேசத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினருக்கு பெண்கள் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் பெண்கள் உட்பட 05 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.