1000 ரூபா வேதன விடயம் தொடர்பில் ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதன விடயத்தில் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர ஏற்பாடு செய்திருந்தார்.

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணி 15 உறுப்பினர்களுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.