மஞ்சள் பயிர்செய்கை விவசாயிகளுக்கு புதிய சிக்கல்

மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் தங்கள் மஞ்சளை நேரத்திற்கு முன்பே அறுவடை செய்வதால் வருகின்ற ஆண்டு நாட்டில் ‘விதை மஞ்சள் கிழங்குகளின்’ பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று ஏற்றுமதி வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது மஞ்சள் பற்றாக்குறை மற்றும் மஞ்சள் விலை அதிகரிப்பு காரணமாக, விவசாயிகள் தங்கள் மஞ்சள் பழுக்குமுன் விற்பனை செய்கின்றனர் என்று திணைக்களத்தின் மேம்பாட்டு இயக்குநர் உபுல் ரணவீரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று உபுல் ரணவீரா மேலும் தெரிவித்தார்.