இன்றைய வானிலை முன்னறிவிப்பு

புரெவி (“BUREVI”) என்ற சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து நேற்று அதிகாலை 05.30 மணியளவில் மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது. எனவே சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)