ஒதியமலைப் படுகொலைகள்– 36ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஒதியமலையில் 1984ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 32 பேருக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான ஒதியமலை கிராமத்தில் 1984ம் ஆண்டு இந்த படுகொலை இடம்பெற்றது.

இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்ற சனசமூக நிலைய வளாகத்தில் இன்றையதினம் நினைவேந்தல் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.