புலிகள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த நபர்களுக்கு மீள விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66வது பிறந்ததினத்தையிட்டு அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி பிறந்ததின வாழ்த்து தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்ட 4 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கலடி, சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேர் கடந்த வியாழக்கிழமை, ஏறாவூர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.