ஹிஸ்புல்லா தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான மற்றுமொரு விடயம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு உரித்தான இரண்டு வங்கிக் கணக்குகளில் 4 பில்லியனுக்கு அண்மித்த அளவிலான பணம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியானது.

இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்காமல் இந்தளவான தொகை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.