பச்சையாக மீனை உண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு மீனவர்கள் பாராட்டு

தங்காலை மீன்பிடி துறைமுக மீனவர்களினால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சியை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று  22 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி பச்சையாக மீனை உண்ட சம்பவத்தை தொடர்ந்து மீன் வியாபாரம் இத்தினங்களில் வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெரிவித்து அவருக்கு இந்த வரவேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கருத்து தெரிவித்த மீனவர்கள், எமது பாராளுமன்ற உறுப்பினர் செய்த செயல் அறியாதவர்களுக்கு புரியாது, எவரையும் பச்சையாக மீனை சாப்பிட சொல்லவில்லை. அன்று தொடக்கம் நாடு பூராகவும் இருந்து மீன் வியாபாரிகள் வருகின்றனர். மீன் வியாபாரம் நன்றாக நடக்கின்றது என்றனர்.

இதேவேளை, அன்று நான் பச்சையாக மீன் சாப்பிட்டு காட்டியதற்கான காரணம் மீனை உணவுக்கு எடுத்துக் கொள்வதற்கு அச்சப்பட வேண்டாம் என மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி தெரிவித்திருந்தார்.

மீனவர்களுக்காகதான் நான் அன்று பச்சையாக மீன் சாப்பிட்டு காட்டினேன். பச்சையாக மீன் சாப்பிட சொல்லி இல்லை. நாட்டு மக்கள் மீன் சாப்பிட அச்சப்பட வேண்டாம் என கூறுவதற்காக. இன்று நாட்டில் மீன் விலை அதிகரித்துள்ளது என்றார்.