நாளை முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

காரியாலய தொடருந்து சேவைகள் நாளை  23 ஆம்திகதி  முதல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தொடருந்து சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.