ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் திகதி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு வழக்குக்கான விசாரணைத் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டு குறித்த சாட்சி விசாரணைகள் மற்றும் வாய்மூல சமர்ப்பணங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன் வழக்கு விசாரரணயின் போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக கடந்த 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

எனினும் அன்றைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அனைத்து விசாரணைகளும் பிற்போடப்பட்டன.

இதற்கமைய பிற்போடப்பட்ட அந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற வான்ப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அமைய சட்டமா அதிபரால் பிரதிவாதியான ரஞ்சன் ரமாநாயகவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரிமாளிக்கையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியட்ட ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் மோசடியாளர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த கருத்து மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு மீது மக்கள் வைத்திருந்த நட்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் முன்வைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x