போகம்பறை தனிமைப்படுத்தல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரும் ஐக்கிய மக்கள் சக்தி

போகம்பறை – பழைய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் கொவிட் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதன் அதிகாரிகள் கண்டியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதனால் கண்டியில் கொவிட் 19 நோய்த்தொற்று பரவும் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது.

எனவே அவரசாங்கம் இதற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

x