30 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

90 இலட்சம் ரூபாய் பெறுமதியான 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் இருந்து வலஸ்முல்ல பகுதியை நோக்கி அதிசொகுசு ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை வடமத்திய மாகாண மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் காவற்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் குறித்த கைது சம்பவம் இன்று (16) முற்பகல் அனுராதபுரம்-ஷாவஸ்திபுர வெள்ளைப் பாலத்திற்கு அருகில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டுவந்திருக்கலாம் என மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

x