கருணா அம்மான் மீது மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும்

கருணா அம்மான் என அறியப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மீது கிழக்கு மாகாண மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமக்கு எதிராக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாம் அரசியலை விட்டுவிலகுவதற்கும் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

x